May 2, 2026

ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுங்கள்: தேர்தல் முடிவுகள் குறித்து பிரேமலதா கருத்து

சென்னை: ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப்பொறுங்​கள் என தேர்​தல் முடிவு​கள் குறித்து பிரேமலதா கருத்து தெரி​வித்​துள்​ளார்.

சென்னை கோயம்​பேட்​டில் உள்ள தேமு​திக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கருத்​துக்​கணிப்பை நான் எப்​படி பார்க்​கிறேன் என்​றால் ஆக்​கப் பொறுத்​தவர்​கள் ஆறப் பொறுங்​கள்; எல்​லாம் முடிந்து இருக்​கிறது. இன்​னும் இரண்டு நாட்​கள் தான் இருக்​கிறது.

மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு ஆரம்​பித்​தால் மாலை 5 மணிக்​குள் ரிசல்ட் தெரியப் போகிறது. அதற்கு அதீத எதிர்​பார்ப்​பும், கற்​பனை​யும் தேவை​யில்​லை. நிச்​ச​யம் எல்​லோருக்​கும் நல்​லதே நடக்​கும்.

மதச்​சார்​பற்ற வெற்​றிக்​கூட்​ட​ணி​யில் போட்டி போடு​கிறோம். உறு​தி​யாக எங்​களு​டைய கூட்​டணி அமோக வெற்றி பெறும்.

இன்​னும் 2 நாட்​கள் தான் இருக்​கிறது. எல்​லோரும் களத்​தில் மிக தீவிர​மாக பணி​யாற்றி இருக்​கிறார்​கள். மே 4-ல் நிச்​சய​மாக வெற்றி வரும். நிச்​சய​மாக நான் உங்​களை அழைத்துப் பேசுவேன். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Spread the love