August 5, 2026

ஆசிரியர் பயிற்றுநர் காலி இடங்களை நிரப்ப வேண்டும்: 2024-ல் தேர்வானவர்கள் முதல்வருக்கு கோரிக்கை

சென்னை: கடந்த 2024-ம் ஆண்டு டிஆர்பி தேர்​வில் அறிவிக்​கப்​பட்ட ஆசிரியர் பயிற்​றுநர் காலி பணி​யிடங்​களை உடனே நிரப்ப வேண்​டும் என்று சான்​றிதழ் சரி​பார்ப்​பில் பங்​கேற்ற ஆசிரியர்​கள் முதல்​வர் விஜய்க்கு வேண்​டு​கோள் விடுத்​துள்​ளனர்.

பட்​ட​தாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்​றுநர் (பிஆர்​டி) காலி பணி​யிடங்​களை நிரப்ப கடந்த 2024-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தால் போட்​டித் தேர்வு நடத்​தப்​பட்​டது. அதில் 2,850 பட்​ட​தாரி ஆசிரியர்​கள் தேர்வு செய்​யப்​பட்​டு, பணி​யிலும் சேர்ந்​து​விட்​டனர்.

ஆனால், இதே தேர்​வில் தேர்ச்சி பெற்​று, சான்​றிதழ் சரி​பார்ப்பு வரை கலந்து கொண்ட நிலை​யிலும், ஆசிரியர் பயிற்​றுநர் பணிக்கு யாரும் தேர்வு செய்​யப்​பட​வில்​லை.

இவ்​வாறு பாதிக்​கப்​பட்ட தேர்​வர்​கள் ஒன்​றிணைந்​து, வட்​டார வள மைய ஆசிரியர் பயிற்​றுநர் தேர்​வர்​கள் கூட்​டமைப்பு என்ற அமைப்பை உரு​வாக்​கி, ஆசிரியர் பயிற்​றுநர் பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், இந்த கூட்​டமைப்பு சார்​பில் தாம்​பரம் உதய​ராணி, அண்ணா நகர் சுபாய் யாதவ் ஆகியோர் சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று கோரிக்கை மனு கொடுத்​தனர்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர்​கள் கூறிய​தாவது: பட்​ட​தாரி ஆசிரியர் பணி நியமனத் தேர்வு 13 ஆண்​டு​களுக்​குப் பிறகு, கடந்த 2024-ல் நடை​பெற்​றது. அதில் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் நியமிக்​கப்​பட்ட நிலை​யில், ஆசிரியர் பயிற்​றுநர் பணி​யிடங்​களை மட்​டும் ஏன் நிரப்​ப​வில்லை என்​பது​தான் எங்​கள் கேள்​வி.

இந்த பணி​யிடங்​கள் கடந்த 16 ஆண்​டு​களாக நிரப்​பப்​ப​டா​மல் உள்​ளன. இந்த சூழலில், புதி​தாக பட்​ட​தாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்​றுநர் பணிக்​கான தேர்வு விரை​வில் நடத்​தப்பட உள்​ள​தாக செய்தி வெளி​யாகி இருப்​பது அதிர்ச்சி அளிக்​கிறது.

2024 வாரி​யத் தேர்​வில் தேர்ச்சி பெற்ற நாங்​கள், கண்​டிப்​பாக வேலை கிடைக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் இருந்​தோம். இப்​போது வாழ்​வா​தா​ரத்தை தொலைத்​து​விட்டு நிற்​கிறோம்.

பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர், செயலர், இயக்​குநர் என பலரை பார்த்​தும், இது​வரை பதில் இல்​லை. எனவே, ஒப்​புதல் அளிக்​கப்​பட்ட ஆசிரியர் பயிற்​றுநர் பணி​யிடங்​களை நிரப்ப முதல்​வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்கள் கூறினர்.

Spread the love