ஆண்டிபட்டியில் இன்று உதயநிதி ஸ்டாலின், நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கின்றனர். ஆண்டிபட்டி, ஏப் 16,தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இன்று மாலை உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேனி மாவட்டத்தில் போடி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கம்பம் தொகுதியில் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, ஆண்டிபட்டி தொகுதியில் மகாராஜன் எம்.எல்.ஏ, பெரியகுளம் தொகுதி (தனி) வி.சி.க.வேட்பாளர் சக்திவேல் ஆகியோர்களை ஆதரித்து இன்று மாலை 5 மணிக்கு மேல் துணை முதல்அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்தந்த தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்கிறார். நாளை (17.04.26) 5 மணி அளவில் ஆண்டிபட்டி அருகே உள்ள பிராதிக்காரன்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுவரும் பிரச்சார மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆண்டிபட்டி, போடி, கம்பம், பெரியகுளம் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்து திரட்டி தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தேனி மாவட்டதி.மு.கசெயலாளர்கள் தங்கதமிழ்செல்வன் எம்.பி.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செய்து வருகின்றனர்.

More Stories
ஏப்.20 வரை தமிழக உள் மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பநிலை உயர வாய்ப்பு
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து R.V நகர் ,முகமதிய புரம்,கிழக்கு ரத வீதி,நாதரஷாதெரு ,மணிகூண்டு கடைவீதி
கள்ளிமந்தயத்தில் சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா