தேனி மாவட்ட பயணிகள் வரவேற்பு
ஆண்டிப்பட்டி, மார்ச். 21,
சென்னையிலிருந்து போடி வரை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் ரயில் சேவை நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததை முன்னிட்டு, ஆண்டிபட்டி ரயில் நிலையத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் ரயிலுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சென்னையில் இருந்து போடிக்கு வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை, வாரத்தில் 6 நாட்களாக உயர்த்தி ஒன்றிய அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்தப் புதிய நடைமுறை நேற்று (வெள்ளிக்கிழமை) முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து போடி நோக்கி வந்த ரயிலுக்கு தேனி மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ரயிலின் வருகையை முன்னிட்டு தண்டவாளம் மற்றும் ரயில் பெட்டிகள் மீது மலர் தூவி உற்சாகப்படுத்தினர்
வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளதன் மூலம், சென்னைக்குச் செல்லும் வணிகர்கள், மாணவர்கள் மற்றும் பணிபுரிவோர் பெரும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

More Stories
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி
நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒன்றிய,நகர மற்றும் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டமானது மக்கள் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் இராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை: