ஆண்டிபட்டி, ஏப்2, ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.தி.மு.க.வேட்பாளராக ஆ.லோகிராஜன் போட்டியிடுகிறார். கடந்த 2 முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்த நிலையில் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். தேர்தல் பணிகளை தொய்வில்லாமல் பணியாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் ராமர் தலைமை தாங்கினார். வேட்பாளர் லோகிராஜன் மற்றும்கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.ஆர்.என்.வரதராஜன், பேரூர் செயலாளர் அருள்மதி கணேசன்,அருண்குமார், கம்பம் ஜெயகுமார் உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்கள்.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம்.

More Stories
*நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்/ அமைச்சர் மா. மதிவேந்தன் தனது மனுவை, இராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். திமுக அரசின் சிறப்பு வாய்ந்த மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கூட்டணி பலம் ஆகியவை தங்களுக்கு வெற்றியை தேடி தரும் என நம்பிக்கை தெரிவித்தார்*.
இராசிபுரம்: 5 ஆண்டு சாதனையை பட்டியலிட்ட அமைச்சர் மா.மதிவேந்தன்…
திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்