July 3, 2026

ஆண்டிபட்டி                   தி லிட்டில்           ஃப்ளவர் பள்ளிகளின்         21வது ஆண்டு விழா               .             ஆண்டிபட்டி, மார்ச் 30,                                                                          தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி.லிட்டில் பிளவர் பள்ளிகளின் 21வது ஆண்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

விழாவை விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர்.கிறிஸ்டியான சிங் அவர்கள் துவங்கி வைத்தார்.

அவரது தொடக்க உரை மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருந்தது.

பள்ளியின் செயலாளர் மேத்யூ ஜோயல் சிறப்பு விருந்தினர்களை  வரவேற்றுப் பேசினார்.

பள்ளித் தாளாளர் எ. ஹென்றி மற்றும் அவரது மனைவி திருமதி. தமயந்தி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்

பள்ளி கல்வி ஆலோசகர் திருமதி. பிரைசிலின் மற்றும் முதல்வர். உமாமகேஸ்வரி அவர்கள் பள்ளி ஆண்டு அறிக்கையை வாசித்தார்கள்.

இந்த ஆண்டு விழாவின் முக்கிய சிறப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவன் பெ.ஹரி விஜய் 1330 திருக்குறள்களை முழுமையாக முற்றோதல் செய்தமைக்காக  அவரது சிறந்த திறமையைப் பாராட்டும் வகையில், அவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. அதோடு, நினைவுச் சின்னமாக ஒரு கேடயமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும், திருக்குறள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இது மாணவர்களுக்கு தமிழின் மகத்துவத்தை உணர்த்தும் நிகழ்வாக அமைந்தது.

இதனுடன், குழந்தைகளின் இனிய நடன நிகழ்ச்சிகளின் மூலம்

 மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வித்தனர்.

இந்த 21வது ஆண்டு விழா கல்வியையும் கலையையும் ஒருங்கிணைக்கும் சிறந்த நிகழ்வாக அமைந்து, மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்தது. இப்படியான நிகழ்வுகள் மாணவர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாட்டினை பள்ளிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Spread the love