அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரிக்கை.
ஆண்டிபட்டி, பிப். 27,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்களின் மாதாந்திர சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் பொன்.சந்திரகலா தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜோதி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில், மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இதில் கலந்து கொண்ட தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள், தங்கள் பகுதிகளில் நிலவும் மக்கள் குறைகளைச் சுட்டிக்காட்டி பேசினர். குறிப்பாக, பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் பாலமுருகன் தனது வார்டு பகுதியில் அம்ருத் திட்டத்தில் உடைக்கபட்ட சாலைகள் சீரமைக்கபடவில்லை வளர்ச்சியடைந்துவரும் காந்திநகர் பகுதியில் சாக்கடை வாறுகால் சரிவர தூர்வாறபடுவதில்லை. 4வதுதெரு முதல் 9வது தெரு வரை சாக்கடை சீர்செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த தெருவிளக்குகளைச் சீரமைக்க வேண்டும்.
சாலை மேம்பாடு மற்றும் சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
உறுப்பினர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவது என கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் பாலமுருகன், முத்துக்குமார் உள்பட பெண் கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
‘ஓபிஎஸ் எழுதியுள்ள துரோக வரலாற்றை மக்கள் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை’ – கவுதமி
உடல் உறுப்புகளை தானம் வழங்கிய கோவை சிறுமி வெண்பாவின் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!
விபத்துக்களை தடுக்க திருவாரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் யாகம் செய்த அதிகாரிகள்!