சனிக்கிழமை, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு, இரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்ய வேண்டியிருந்தது.
அது ஞாயிற்றுக்கிழமை காலையில், அவருடைய ட்ரூத் சோசியல் பதிவுகளின் வாயிலாக வெளியானது.
அமெரிக்கா இரானின் மீது ஒரு கடற்படை முற்றுகையை நடத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார். “சட்டவிரோதக் கட்டணம் செலுத்தும் எவருக்கும், நடுக்கடலில் பாதுகாப்பான பயணம் கிடைக்காது,” என்று அவர் தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்யும் பொருட்டு, ஹோர்மூஸ் நீரிணையிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணியை அமெரிக்கா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். அமெரிக்க ராணுவம் “முழுமையாகத் தயார் நிலையில்” இருப்பதாகவும், “பொருத்தமான ஒரு தருணத்தில்” இரானுக்கு எதிரான தாக்குதல்களை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.https://flo.uri.sh/visualisation/25999072/embed?auto=1
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், தனது அணுசக்தி லட்சியங்களைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இரான் ஏற்பதாக தெரியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வான்ஸின் பேச்சுவார்த்தைகள் குறித்து நன்கு அறிந்திருந்த அமெரிக்க அதிகாரி ஒருவர், அந்தக் கருத்தை ஓரளவுக்கு மறுத்தார்; அவர், ஹோர்மூஸ் நீரிணை மீதான இரானின் கட்டுப்பாடு மற்றும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், லெபனான் ஹெஸ்பொலா போன்ற பிராந்திய ஆயுதக்குழுக்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு உள்ளிட்ட, முரண்பாடுகளின் மிக நீண்ட பட்டியலை விரிவாக எடுத்துரைத்தார்.
இரானிய நாகரிகத்தையே முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று கடந்த வாரம் விடுத்த அச்சுறுத்தலில் காணப்பட்ட பேரழிவு சார்ந்த ஆக்ரோஷத்தை, டிரம்பின் சமீபத்திய பதிவுகள் கொண்டிருக்கவில்லை என்ற போதிலும் அவை அமெரிக்கத் தரப்புக்குப் பல புதிய சவால்களையும் மற்றும் இடர்களையும் முன்வைக்கின்றன.
கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள், அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களை இரானியத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடிய அதிகப்படியான ஆபத்தில் நிறுத்துமா? இரானுக்கு யார் ‘கட்டணம்’ (toll) செலுத்தினர் என்பதை அமெரிக்கா எவ்வாறு கண்டறியும்? இந்த முற்றுகையைப் புறக்கணிக்கும் வெளிநாட்டுக் கொடியிட்ட கப்பல்கள் மீது அமெரிக்கா பலத்தைப் பிரயோகிக்குமா? இரானிய எண்ணெயைச் சார்ந்திருக்கும் சீனா போன்ற நாடுகள் இதற்கு எவ்வாறு பதிலளிக்கும்? இரானின் முதன்மையான வருவாய் ஆதாரத்தை முடக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை, கச்சா எண்ணெய் விலையை இன்னும் உச்சபட்ச நிலைகளுக்கு உயர்த்துமா?

More Stories
அமெரிக்கா – இரான் பேச்சுவார்த்தையில் காத்திருக்கும் 5 சவால்கள்
ஹார்மூஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் சம்மதம்.. இந்திய மக்களுக்கு குட் நியூஸ்..
ஈரான் – அமெரிக்க தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஆதரவு