சென்னை: உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுடன் உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தை தொடர்ந்து துறைகள் வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம் உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர் தீரஜ் குமார், ரஷ்மி சித்தார்த் ஜகடே, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி. ரத்தினசாமி, கல்லூரிக் கல்வி ஆணையர் பா. பொன்னையா, தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையர் எஸ்மலர்விழி, அறிவியல் நகர துணைத் தலைவர் எஸ்.விசாகன், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் உறுப்பினர் – செயலர் எஸ்.வின்சென்ட் மற்றும் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உயர்கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள், பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலிப் பணியிடங்களை நிரப்புவது. துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

More Stories
‘தொகுதி மறுவரையறை’ ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திமுக நிபந்தனை
ஓய்வூதியத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி குறைப்பு – முதல்வர் விளக்கமளிக்க தலைமை செயலக சங்கம் வலியுறுத்தல்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்