February 11, 2026

உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

காயிதே மில்லத் அறிவியல் கல்லூரியின் பொன்விழா கொண்டாட்டம்

காயிதே மில்லத் கல்லூரி பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழாவில் கல்லூரி பொன்விழா மலரை அமைச்சர்கள்  மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வெளியிட்டனர். உடன், கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான், ராயல் கிங்ஸ் குழும தலைவர் சிராஜுதீன் உள்ளிட்டோர். | படம்: எம்.முத்துகணேஷ் |

காயிதே மில்லத் கல்லூரி பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழாவில் கல்லூரி பொன்விழா மலரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கோவி.செழியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வெளியிட்டனர். உடன், கல்லூரி தாளாளர் தாவூத் மியாகான், ராயல் கிங்ஸ் குழும தலைவர் சிராஜுதீன் உள்ளிட்டோர். | படம்: எம்.முத்துகணேஷ் |

மேடவாக்கம்: உயர்​கல்​வி சேர்க்​கை​யில் தமிழ்​நாடு, இந்​தி​யா​வில் முதன்மை மாநில​மாகத் திகழ்​கிறது என்று, மேட​வாக்​கம் காயிதே மில்​லத் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​யின் பொன்​விழா​வில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

செங்​கல்​பட்டு மாவட்​டம், தாம்​பரம் அருகே மேட​வாக்​கத்​தில் உள்ள காயிதே மில்​லத் கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​யின் 50-ம் ஆண்டு பொன்விழா கொண்​டாட்​டம் நேற்று நடை​பெற்​றது. கல்​லூரி செயலர் மற்​றும் தாளாளர் எம்​.ஜி. தாவூத் மியா​கான் தலைமை தாங்​கி​னார்.

கிரெ​டாய் தலை​வர் எ. முஹம்​மத் அலி, சிங்​கப்​பூர் ராயல் கிங்ஸ் குரூப் தலை​வர் சிராஜுதீன், சென்​னைப்பல்​கலைக்​கழக முன்​னாள் துணை வேந்​தரும், காயிதே மில்​லத் கல்​லூரி​யின் புர​வலரு​மான சே. சாதிக் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர். இதில், மருத்​து​வம் மற்​றும் மக்​கள் நல்​வாழ்வு துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், உயர்கல்வித் துறை அமைச்​சர் கோவி. செழியன், பள்​ளிக் கல்​வித் துறை அமைச்சர் அன்​பில் மகேஸ் ஆகியோர் கலந்​து ​கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யில் பேசிய அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், “உயர்கல்வி சேர்க்​கை​யில் தமிழ்​நாடு இந்​தி​யா​வில் முதன்மை மாநில​மாகத் திகழ்​கிறது. உயர்கல்வி தேர்ச்சி விகிதத்​திலும், உயர்கல்வி செயற்கை விகிதத்​திலும் இந்​தி​யா​வில், தமிழ்​நாடு இன்​றைக்கு முதன்மை மாநில​மாக இருந்து கொண்​டிருக்​கிறது என்​றால், அதற்குக் காரணம் தமிழ்​நாடு அரசின் மாணவர்​களுக்​கான திட்​டங்​கள் தான் என்​பதை நீங்​கள் நன்​றாக அறிவீர்​கள்.

நான் முதல்​வன் திட்​டத்​தின் மூலம் இது​வரை 42 லட்​சம் மாணவர்​கள் பயனடைந்​துள்​ளனர். குறிப்​பாக, ஜப்​பானில் ஆண்​டுக்கு ரூ.20 லட்​சம் சம்​பளத்​துடன் கூடிய வேலை​வாய்ப்​பைப் பெற்​றுத் தந்து சாதனை படைத்​துள்​ளது. ரூ.1,172 கோடி மதிப்​பீட்​டில் 10 லட்​சம் மாணவர்​களுக்கு மடிக்​கணினிகள் வழங்​கப்​படு​கின்​றன.

இதில் நவீன சாட்​ஜிபிடி (ChatGPT), ஏஐ (AI) கருவி​களைப் பயன்​படுத்த மாதச் சந்​தாவை​யும் அரசே ஏற்​கிறது. 7.5 சதவீத இடஒதுக்​கீடு அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு தொழில்​சார் படிப்​பு​களில் முன்​னுரிமை அளிக்​கப்​படு​வதோடு, அவர்​களின் முழுச் செல​வை​யும் அரசே ஏற்​றுள்​ளது” என்​றார். அமைச்​சர் கோவி.

செழியன் பேசும்​போது, “உயர் கல்​வி​யில் தேசிய இலக்கை தமிழ்​நாடு முறியடித்​து. 2030-ம் ஆண்​டில் உயர்கல்வியில் அடைய வேண்​டிய இலக்​கை, தமிழ்​நாடு 2021-லேயே (54%) எட்​டி​விட்​டது. சிறு​பான்​மை​யின மக்​களின் பாது​காப்​புக்கு திரா​விட இயக்​கம் அரணாக இருக்​கிறது. மதச்​சார்​பற்ற கொள்​கை​யின் அடை​யாள​மாக முதல்​வர் ஸ்டா​லின் திகழ்​கிறார்” என்​றார்.

அமைச்​சர் அன்​பில் மகேஸ் பேசும்​போது, “முன்பு அனை​வரும் ஒன்​றாக அமர்ந்து படிக்க முடி​யாத நிலை இருந்​தது.ஆனால் இன்று அனை​வரும் சமமாக அமர்ந்து கல்வி பயில்​கிறோம். வெறும் கல்​லூரிப் படிப்பு மட்​டும் போதாது. இன்​றைய காலத்​துக்கு ஏற்ப திறமை​களை வளர்த்​துக் கொள்ள வேண்​டும். ‘நான் முதல்​வன்’ திட்​டம் மூலம் பயிற்சி பெற்​றவர்​களில் 2 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைத்​துள்​ளது” என்​றார்.

இவ்விழா​வில், காயிதே மில்​லத் கல்​லூரி​யின் பொன்​விழா சிறப்​புப் புத்​தகம் வெளி​யிடப்​பட்​டது. இதில், சென்னை உயர் நீதி​மன்​ற முன்​னாள் நீதிப​தி, கே.என். பாஷா, ஓமி​யாட் தலை​வர் எ. முஹம்​மத் அஷ்ரப், பேராசிரியர்​கள், கல்​லூரி மாணவர்​கள் கலந்​து​கொண்​டனர்.

Spread the love