November 25, 2026

ஒட்டன்சத்திரத்தில் ‘நீர் காப்போம்’ கருத்தரங்கம் – 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு!

ஒட்டன்சத்திரம் நவ.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள சங்கீதா கிராண்ட் தனியார் அரங்கில், மொபைல் டெக் நிறுவனத்தின் சார்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தானியங்கி சொட்டுநீர் பாசன முறைகள் குறித்த ‘நீர் காப்போம்’ கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு மொபைல் டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் முத்துக்குமார், நவீன நீர்ப்பாசன முறைகள் மற்றும் அவற்றின் பயன்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

தொடர்ந்து, மொபைல் டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தனசேகரன், நிறுவனத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.

இதில் செல்போன் மூலம் மோட்டார் ஸ்டார்ட்டர் இயக்கும் வசதி, சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன ஆட்டோமேஷன், வயர்லெஸ் ஆட்டோமேஷன் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சொட்டுநீர் பாசனக் கட்டுப்படுத்தி, தானியங்கி உரம் செலுத்தும் கருவி மற்றும் மொபைல் டெக் டி-புளோ உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் குறித்துச் செயல்முறை விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டன.

மேலும், குறைந்த அளவு நீரைப் பயன்படுத்தி அதிகப் பயன் பெறுவது, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாய உற்பத்தியை மேம்படுத்துவது, நவீன தொழில்நுட்பங்களை விவசாயத்தில் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்.எஸ். சொல்யூஷன்ஸ் சிவசாமி மற்றும் அம்பிளிக்கை அம்மன் டிரேடர்ஸ் மோகன் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

இந்தக் கருத்தரங்கில் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு நவீன நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள் குறித்துப் பயனுள்ள தகவல்களைப் பெற்றனர்.

Spread the love