October 4, 2026

‘ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்கிறது’ – பைலட் ஸ்மித் உடன் பேசிய பிரதமர் மோடி புகழாரம்

இந்​திய பைலட் ஸ்மித் மச்​சார் உடன் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று வீடியோ காலில் பேசி​னார். அப்​போது, “ஒட்​டுமொத்த நாடும் உங்​களால் பெருமை கொள்​கிறது” என்று பிரதமர் மோடி பாராட்டு தெரி​வித்​தார். “ஃபிளை துபாய்” விமான கடத்​தலை வெற்​றிகர​மாக முறியடித்த இந்​திய பைலட் ஸ்மித் மச்​சார், ஐக்​கிய அரபு தலைநகர் அபு​தாபி​யில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். அவருடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ காலில் பேசி​னார்.

பிரதமர்: எப்​படி இருக்​கிறீர்​கள்? உடல்​நிலை எப்​படி இருக்​கிறது?

ஸ்மித் : பரா​வா​யில்​லை.

பிரதமர்: ஒட்​டுமொத்த இந்​தி​யா​வும் உங்​களுக்​காக பிரார்த்​தனை செய்து கொண்​டிருக்​கிறது. உங்​கள் வீரம், விவேகம், நிதானத்தை பாராட்​டு​கிறேன். ஒரு நொடிப்​பொழு​தில் நீங்​கள் எடுத்த விவேக​மான முடிவு பலரின் உயிர்​களை காப்​பாற்றி உள்​ளது. எப்​படி​யா​வது உயிர்​களை காப்​பாற்ற வேண்​டும் என்ற இந்​தி​யர்​களின் வேட்கை உங்​களிடம் இருந்து வெளிப்​பட்டு இருக்​கிறது. ஒட்​டுமொத்த நாடும் உங்​களை நினைத்து பெரு​மிதம் கொள்​கிறது. யாருடைய உயிரை​யும் இந்​தி​யர்​கள் பறிப்​பது கிடை​யாது. உயிர்​களைக் காப்​ப​தையே தங்​களின் தலை​யாய கடமை​யாக இந்​தி​யர்​கள் கருதுகின்​றனர்.

உங்​கள் உடல் முழு​வதும் மிகப்​பெரிய காயங்​கள் ஏற்​பட்டு உள்​ளன. வாழ்​வுக்​கும் சாவுக்​கும் இடையே நீங்​கள் போராடிக் கொண்​டிருந்​தீர்​கள். அந்த நேரத்​தில் உங்​களது உயிரைப் பணயம் வைத்து அனைத்து பயணி​களின் உயிர்​களைக் காப்​பாற்றி உள்​ளீர்​கள். உங்​களால் 140 கோடி இந்​தி​யர்​களின் மதிப்​பு, மரி​யாதை உயர்ந்​திருக்​கிறது. விமானிகள் அறை​யில் நடந்​தது என்ன?

ஸ்மித்: துணை விமானி திடீரென நடத்​திய கொடூர தாக்​குதலில் நான் நிலைகுலைந்து தரை​யில் விழுந்​து​விட்​டேன். எனது உடல் முழு​வதும் பலத்த காயங்​கள் ஏற்​பட்டு ரத்​தம் வெளி​யேறியது. என்​னால் எழுந்​திருக்க முடிய​வில்​லை. நான் 17 ஆண்​டு​களாக விமானங்​களை இயக்கி வரு​கிறேன். சுமார் 11 ஆண்​டு​கள் விமான கேப்​ட​னாக பணி​யாற்றி வருகிறேன். இந்த அனுபவத்​தின் அடிப்​படை​யில் விமானத்​தின் நிலையை என்​னால் உணர முடிந்​தது. தரை​யில் விழுந்து கிடந்​தா​லும் விமானம் செங்​குத்​தாக கீழே இறங்​கு​வதை என்​னால் தெளி​வாக உணர முடிந்​தது.

ஹனு​மன் பாடலை பாடினேன்​

எனது வாழ்​நாளின் இக்​கட்​டான நேரங்​களில் ஹனு​மன் பாடலை பாடு​வது வழக்​கம். உயிர்​போகும் தரு​வா​யில் நான் ஹனு​மன் பாடலைப் பாடினேன். விமானிகளின் அறைக் கதவு எனக்கு அருகே இருந்​தது. இது​தான் கடைசி வாய்ப்பு என்​பதை உணர்ந்​தேன். என் மீது தொடர்ந்து தாக்​குதல் நடத்​தப்​பட்டு கொண்டே இருந்​தது. ஆனாலும் எனது முழுபலத்​தை​யும் திரட்டி கதவை திறந்​து​விட்​டேன்.

அதன்​பிறகு பயணி​கள் உள்ளே வந்​தனர். மிகப்​பெரிய பேரழிவை தடுத்​த​தில் அனை​வருக்​கும் சரிசம​மான பங்கு உள்​ளது. விமானத்​தில் உள்ள பயணி​கள் யாரும் உயி​ரிழக்​கக் கூடாது என்​ப​தில் மிக​வும் உறு​தி​யாக இருந்​தேன். அந்த உத்​வேகத்​தில் உயிர் போகும் தரு​வா​யிலும் கதவை திறந்​தேன். எனது சிறு​வயது முதலே நீங்​கள்​தான் எனக்கு முன்​மா​திரி தலை​வர். உங்​களோடு பேசுவேன் என்று நினைத்​துக்​கூட பார்க்​க​வில்​லை. இப்​போது உங்​களோடு பேசும்​போது மிக​வும் உணர்ச்​சிப்​பூர்​வ​மாக இருக்​கிறது.

பிரதமர்: உங்​களது அம்​மா, அப்​பா, மனை​வி​யுடன் பேசினேன். இக்​கட்​டான நேரத்​தில் நீங்​கள் ஹனு​மன் பாடலை பாடி தைரி​யத்தை பெற்​றுள்​ளீர்​கள். உங்​கள் அம்மா கீதாபென்​னும் அப்பா பூபேந்​திர மச்சாரும் உங்​களுக்கு பகவத் கீதை​யின் போதனை​களை கற்​றுக்கொடுத்து நல்​லொழுக்​கத்​துடன் வளர்த்து உள்​ளனர். அவர்​களை பாராட்​டு​கிறேன். உங்​கள் மனைவி சோனல் தைரிய​சாலி. துயர​மான நேரத்​தி​லும் அவர் மிகுந்த மன உறு​தி​யுடன் பேசி​னார்.

உங்​களுக்கு ஏதாவது உதவி தேவை என்​றால் தயங்​காமல் என்னை தொலைபேசி​யில் அழை​யுங்​கள். நீங்​கள் விரை​வில் குணமடைய பிரார்த்​தனை செய்​கிறேன். இந்​தியா முழு​வதும் அனைத்து கோயில்​களி​லும் உங்​களுக்​காக சிறப்பு பிரார்த்​தனை​கள் நடை​பெற்று வரு​கின்​றன. நீங்​கள் விரை​வில் குணமடைய வேண்​டும். நீங்​கள் இந்​தியா திரும்​பும் நாளை மிகுந்த ஆவலோடு எதிர்​பார்த்து காத்​திருக்​கிறோம்.

பிரதமர் நரேந்​திர மோடி, பைலட் ஸ்மித் மச்​சார் இடையி​லான உரைட​யால் சுமார் 10 நிமிடங்​கள் நீடித்​தது. பிரதமருடன் பேசும்​போது ஸ்மித் உணர்ச்​சிவசப்​பட்டு அழு​தார். ஸ்மித் உடன் பேசிய வீடியோவை பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு உள்​ளார். இந்த வீடியோ உலகம் முழு​வதும் வைரலாக பரவி வருகிறது.

கடவுள் மனவலிமையை அளித்தார்

இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் தந்தை பூபேந்திர மச்சார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

விமான கடத்தல் முயற்சி மற்றும் எனது மகன் ஸ்மித் தாக்கப்பட்டது குறித்த தகவலை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். எப்படியாவது எனது மகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று மன்றாடினேன். கடவுளின் கருணையால் அவர் உயிர் பிழைத்தார். இக்கட்டான நேரத்தில் எனது மகனுக்கு கடவுள் மனவலிமையை அளித்தார். இதன் காரணமாகவே விமான பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இவ்வாறு உபேந்திர மச்சார் தெரிவித்துள்ளார்.

நிலைகுலைந்து போனேன்: ஸ்மித் மச்சாரின் மனைவி சோனல்

இந்திய பைலட் ஸ்மித் மச்சாரின் மனைவி சோனல் அபுதாபியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஃபிளை துபாய் விமானத்தை இயக்கியபோது எனது கணவர் தாக்கப்பட்டது குறித்த தகவலை அறிந்ததும் நிலைகுலைந்து போனேன். எனது மனஉறுதியை இழந்தேன். எனினும் உறவினர்கள், நண்பர்கள் என்னை தேற்றினர். 

தற்போது எனது கணவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் வேகமாக குணமடைந்து வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி என்னிடமும் எனது கணவரிடமும் பேசினார். இது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என்ன நடந்தது என்பது குறித்து எனது கணவரிடம் விசாரிக்கவில்லை. அவர் குணமடைந்த பிறகே முழுமையான விவரங்களைக் கேட்டறிவேன். எனது கணவர் குணமடைய ஒட்டுமொத்த இந்தியர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். 

எனது குடும்பத்தின் சார்பில் ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எனது கணவரிடம் பேச விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அவர் குணமடைந்த பிறகு இஸ்ரேல் பிரதமரிடம் பேசுவார். இவ்வாறு சோனல் தெரிவித்தார்.

இஸ்ரேல் விமான பாதுகாப்பு நடைமுறைகளில் குறைபாடு

இஸ்ரேலின் ‘சேனல் 12’ செய்தி தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தூதரக உறவு இல்லாத நாடுகளை சேர்ந்தோர் இஸ்ரேலில் பணியாற்ற அனுமதி கிடையாது. இஸ்ரேலுக்கும் ஓமன் நாட்டுக்கும் இடையே தூதரக உறவு கிடையாது. ஆனால் ஓமன் நாட்டைச் சேர்ந்த பைலட்கள், இஸ்ரேல் நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வந்து உள்ளனர்.

தற்போது ஓமனை சேர்ந்த துணை பைலட் ஒருவர் ‘ஃபிளை துபாய்’ விமானத்தை கடத்தி இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை முயற்சி செய்துள்ளார். இனி வரும் காலத்தில் இஸ்ரேலுக்கு வரும் விமானங்களை இயக்கும் பைலட்களின் பின்னணி குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஃபிளை துபாய் நிறுவனத்தின் அலட்சியம்

இஸ்ரேல் விமான போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில், “தூதரக உறவு இல்லாத நாடுகளின் பைலட்கள் இஸ்ரேல் நகரங்களுக்கு விமானங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று ஃபிளை துபாய் விமான நிறுவனத்துக்கு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தோம். ஆனால் அந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் விமான கடத்தல் முயற்சி நடைபெற்று இருக்கிறது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் கவலையை எடுத்துரைத்துள்ளோம். இனி வரும் காலங்களில் பைலட்டுகளின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும்” என கூறப்பட்டுள்ளது.

சிறுமி அலறியதால் உஷாரான பயணிகள்

பயணிகள் விமானத்தின் காக்பிட் (பைலட்கள் அறை) கதவு கெவ்லர் என்ற பைபரால் தயாரிக்கப்பட்டது ஆகும். இது எஃகைவிட 5 மடங்கு வலிமையானது ஆகும். காக்பிட் கதவின் மீது உருக்கு மற்றும் டைட்டானியம் முலாமும் பூசப்பட்டு இருக்கும். துப்பாக்கிச்சூடு தாக்குதல், கையெறி குண்டு தாக்குதலால் காக்பிட் கதவை திறக்க முடியாது.

பைலட்டுகளின் அனுமதி பெற்றே விமான பணிப்பெண்கள், ஊழியர்கள் காக்பிட் அறைக்குள் நுழைய முடியும். உள்ளிருந்து மட்டுமே கதவை திறக்க முடியும். வெளியில் இருந்து கதவை திறக்க முடியாது.

ஓமனை சேர்ந்த துணை பைலட் மிகக் கொடூரமாக தாக்கிய நிலையில் தரையில் விழுந்து கிடந்த இந்திய பைலட் ஸ்மித் மச்சார் மிகுந்த சிரமப்பட்டு காக்பிட் கதவை திறந்து உள்ளார்.

விமானத்தின் காக்பிட்டை ஒட்டி கழிப்பறை இருக்கும். 6 வயது சிறுமி நினா கழிப்பறையில் இருந்து வெளியே வரும்போது பைலட் ஸ்மித்தின் அலறலை கேட்டு பயத்தில் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அப்போது சிறுமி அலறியதால் மற்ற பயணிகள் உஷாரானார்கள். சிறுமியின் தந்தையும் சக பயணிகளும் காக்பிட் அறையை நோக்கி ஓடி வந்துள்ளனர். இதன் காரணமாகவே மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

Spread the love