October 4, 2026

வேதங்களைப் போல பக்தியுடன் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டும்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து சம்​பிர​தா​யத்​துக்​காக பாடப்​படும் சடங்கு அல்ல, வேதங்​களைப் பாடு​வது போல் பக்​தி​யுடன் அதனை பாட வேண்​டும் என ‘நேச்​சர் கியூர் ஃபெஸ்ட்’ விழா​வில் நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் வலி​யுறுத்​தி​னார்.

உலக சைவ உணவுக் கழகம், அரசு யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை மாணவர் மன்​றம், ரோட்​டரி சங்​கம் சார்​பில் காந்தி ஜெயந்​தியை முன்​னிட்​டு, மக்​களிடையே யோகா, இயற்கை மருத்​து​வம், ஆரோக்​கிய​மான வாழ்க்கை முறை குறித்த விழிப்​புணர்வை ஏற்​படுத்​தும் நோக்​கில் ‘நேச்​சர் கியூர் ஃபெஸ்ட்- 2026’ திரு​விழா சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் விளை​யாட்​டரங்​கில் நேற்று நடை​பெற்​றது.

இயற்கை மற்​றும் நல்​வாழ்​வுக்​கான விழிப்​புணர்​வுப் பேரணி​யுடன் தொடங்​கிய விழா​வில், பொது​மக்​களுக்கு இலவச யோகா, இயற்கை மருத்​துவ ஆலோ​சனை முகாம்​கள் நடத்​தப்​பட்​டன.

விழா​வின் சிறப்​பம்​ச​மாக அமைக்​கப்​பட்​டிருந்த இயற்கை உணவு கண்​காட்​சி​யில், 1,000-க்​ கும் மேற்​பட்ட சமையல் எரி​வா​யு, எண்​ணெய் இல்​லாத பாரம்​பரிய இயற்கை உணவு வகைகள் காட்​சிப்​படுத்​தப்​பட்டு நோவா உலக சாதனை அங்​கீ​காரம் பெறப்​பட்​டது.

தொடர்ந்​து, ‘சைவ உணவைத் தேர்ந்​தெடுப்​போம், யோகா செய்​வோம்’ என்ற விழிப்​புணர்வு அணிவகுப்​பும் நடை​பெற்​றது. தொடக்க விழா​வில் இயற்கை மருத்​து​வம் சார்ந்த நூல்​களை வெளி​யிட்டு சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்​கடேஷ் பேசி​ய​தாவது: எந்​தவொரு உயிருக்​கும் துன்​பம் தராத சைவ உணவு நமக்​குள் மன அமை​தி​யை​யும், மனத்​தெளிவை​யும் தரும்.

திரு​வள்​ளுவர், காந்​தி, பிதாகரஸ், ஆல்​பர்ட் ஐன்​ஸ்​டீன், பெர்​னாட் ஷா போன்ற அறிஞர்​கள் கூட சைவ உணவின் சிறப்​பு​கள் குறித்​து் பேசி​யுள்​ளனர். அதற்​காக சைவ உணவு என்​பது உயர்ந்த தகுதி என்​ப​தெல்​லாம் அல்ல. சைவ உணவு உலகத்​தில் உள்ள அனைத்து உயிர்​களு​ட​னும் நம்மை நெருக்​க​மாகப் பிணைக்​கிறது.

உடற்​ப​யிற்​சிக் கூடங்​களுக்​குச் சென்று பணம் செல​வழித்து உடம்பை வருத்​து​வதை விட, வீட்​டில் யோகா செய்​தால் 120 ஆண்​டு​கள் வரை கூட ஆரோக்​கிய​மாக வாழலாம். நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்து பாடிய​போது உச்​சரிப்​பில் பிழை இருந்​தது.

வேதங்​களை​யும் உபநிடதங்​களை​யும் பாடும்​போது எவ்​வளவு பக்தி இருக்​குமோ, அதே அளவு பக்​தி​யுடன், அர்த்​தத்தை புரிந்​து​கொண்டு தமிழ்த்​தாய் வாழ்த்​தைப் பாட வேண்​டும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

நிகழ்​வில் அரசு யோகா மற்​றும் இயற்கை மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் என்​.மண​வாளன், உலக சைவ உணவுக் கழக தலை​வர் மஹாவீர் போத்​ரா, நிறு​வனர் தாராசந்த் துகார், செய​லா​ளர் சுதாகர், ரோட்​டரி மாவட்ட ஆளுநர் ஸ்ரீராம் துவூரி, அடை​யார் ஆனந்த பவன் நிர்​வாக இயக்​குநர் கே.டி.ஸ்ரீனி​வாச ராஜா உள்​ளிட்​டோர் பங்கேற்​றனர்.

Spread the love