March 14, 2026

கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது பற்றி…

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து கச்சா எண்ணெய் மீண்டும் 100 டாலரைக் கடந்துள்ளது.

ஈரான் – அமெரிக்க போரைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்த வாரத் தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலரைக் கடந்தது. இதையடுத்து, ஜி7 நாடுகள் தங்களின் அவசர கால கையிருப்பில் இருக்கும் எண்ணெய்களை வெளியிட முன்வந்ததால், கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கும் கீழ் குறைந்தது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கலீஃபா துறைமுகத்தில் இருந்து குஜராத் கண்ட்லா துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த மயூரி நரீ என்கிற சரக்குக் கப்பல் ஹோர்முஸ் நீரிணையை நெருங்கியபோது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

தொடர்ந்து பிரிட்டன், ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்களும் அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இந்த தாக்குதல்களில் இரண்டு இந்திய மலுமிகள் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில், கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் பீப்பாய் 100 டாலரைக் கடந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது,Advertise with us

இந்தியாவில் பீப்பாய் 130 டாலரைக் கடக்கும் வரை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love