மார்ச் 13
திருப்பூர் மாவட்டம் அவினாசி தேவராயன் பாளையம் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் ஜோதிமணி தம்பதியினர். பிரேம்குமார் கடந்த சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் பிரேம்குமாருக்கு சொந்தமான 3 1/2 ஏக்கர் வீடு மற்றும் தோட்டத்தை இவரது மனைவி ஜோதிமணி தற்போது பராமரித்து வருகிறார் இந்நிலையில் ஜோதிமணி
யின் உறவினரான பிரகாஷ்., ரித்திக்., இருவரும் சேர்ந்து ஆளுங்கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகியான செந்தில் மற்றும் இவரது ஆதரவாளர்கள் என 50க்கும் மேற்பட்ட குண்டர்கள் ஜோதி மணியின் தோட்டம் மற்றும் வீடு அமைந்துள்ள இடத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜி.சி. பி பியந்திரத்தை கொண்டு காம்பவுண்ட் சுவரை இடித்தும்., தோட்டத்திலிருந்த தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளனர். திமுக நிர்வாகி அடியாட்களுடன் தோட்டத்திற்குள் நுழைந்து சுவர்களை இடித்து சேதப்படுத்தும் சிசிடிவி காட்சிகள் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஜோதிமணி தன் கணவர் இல்லாததால் சொத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் தனது உறவினரானபிரகாஷ்., ரித்திக் மற்றும் ஆளும் கட்சி நிர்வாகி செந்தில் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிசிடிவி ஆதாரங்களுடன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் .தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து காம்பவுண்ட் சுவர்களை இடித்து தென்னை மரங்களை சேதப்படுத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்