May 9, 2026

கடைசி சுற்றில் குகேஷ் வெற்றி

வார்சா: போலந்​தின் வர்சா நகரில் கிராண்ட் செஸ் டூரின் சூப்​பர் ரேப்​பிடு மற்​றும் பிளிட்ஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. 10 வீரர்கள் கலந்து கொண்​டுள்ள இந்​தத் தொடரில் ரேப்​பிடு பிரி​வின் கடைசி சுற்​றில் உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ஃபேபி​யானோ கருணாவுடன் மோதி​னார்.

இதில் 49-வது நகர்த்​தலின் போது குகேஷ் வெற்றி பெற்​றார். இதன் மூலம் அவர், 9 புள்​ளி​களு​டன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்​ளார். ரேப்​பிடு பிரிவு போட்டி முடிவடைந்​துள்ள நிலையில் 18 சுற்​றுகள் கொண்ட பிளிட்​ஸ் பிரிவு போட்டி நடைபெற உள்​ளது.

Spread the love