ஆகஸ்ட் 30
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி இயக்க மறுசீரமைப்பு திட்டம் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி ஒன்றிய , நகர, பேரூர் நிர்வாகிகள் புதிதாக தேர்ந்தெடுக்கும் பணிகளின் கீழ் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எஸ்.எஸ்.ஏ-2 மறுசீரமைப்பு இயக்க ஆலோசனை மற்றும் விண்ணப்பம் வழங்கும் கூட்டம் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர். K.P.முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர்.R.P. ரமேஷ், மாநில சொத்து மீட்பு குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான R.M. பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு மறு சீரமைப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து புதிதாக பொறுப்புகளுக்கு.விண்ணர்பித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து செய்தி
யாளர்களிடம் பேசிய மேலிட பார்வையாளர் ரமேஷ் கூறுகையில் மூத்த முன்னோடிகளுக்கும் அடிமட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஒன்றிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் வயதின் அடிப்படையிலும் அனுபவத்தின் அடிப்படையிலும் பதவிகள் வழங்கப்படும் என்றும் இதில் யாருக்கும் பாரபட்சம் இருக்காது என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்.L.P. பாலசுப்பிரமணியம்,
ஊத்துக்குளி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர். மனோஜ் குமார், ஊத்துக்குளி வடக்கு வட்டார தலைவர். சர்வேஸ்வரன், கிழக்கு வட்டாரத் தலைவர். பழனிசாமி,செங்கப்பள்ளி, குன்னத்தூர், உள்ளிட்ட ஒன்றியங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

More Stories
இராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்,,
பழனி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக ஐந்து பேருக்கு பணி – சிபிஎம் போராட்டத்தால் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.