August 29, 2026

பழனி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக ஐந்து பேருக்கு பணி – சிபிஎம் போராட்டத்தால் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.

​பழனி அரசு தலைமை மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் QPMS பணியாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் சி.ஐ.டி.யு (CITU) சார்பில் நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தின்,  தற்போது சுமூக உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.
​திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
​இதன் முதற்கட்டமாக 5 நபர்களுக்கு உடனடியாக பணி பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது:
​ முருகன்
​ முருகானந்தம்
​சித்ரா
​ஜெயலட்சுமி
​ கனிமொழி
​மீதமுள்ள பணியாளர்களும் காலிப்பணியிடங்கள் உருவாகும் போது படிப்படியாக பணியில் இணைக்கப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உரிமைக்காக நின்று போராடி வெற்றியைச் சாத்தியமாக்கிய சிபிஎம் மற்றும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்திற்குப் பணியாளர்கள் நன்றி தெரிவித்தனர். 

Spread the love