June 20, 2026

காங்கோவில் மிகவும் ஆபத்தான வைரஸ்.. தொடரும் உயிரிழப்புகள்.. அவசரநிலை அறிவித்த ஐ.நா.!

இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில், எபோலா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு இதனைச் சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு வைரஸ் மக்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் இந்த எபோலா பரவல், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள், ஜூன் மாத நிலவரப்படி காங்கோ மற்றும் அதன் அண்டை நாடான உகாண்டாவையும் சேர்த்து 900-க்கும் மேற்பட்டோருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கோவின் வடகிழக்கு மாகாணமான இத்தூரிதான் இந்த நோய்ப் பரவலின் மையப்பகுதியாக உள்ளது. இது தவிர வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு மாகாணங்களுக்கும் நோய் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Ebola Virus Claims More Than 200 Lives in DR Congo

இந்த முறை காங்கோவில் பரவிவரும் எபோலா வைரஸ் வகை மிகவும் ஆபத்தானது. இதற்கு முன்னதாகப் பரவிய ‘ஜைர்’ எபோலா வகைக்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டன.

Spread the love