ஜோலார்பேட்டை, ஜூன்.19-
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் புதுப்பேட்டை பகுதியில் தமிழக வெற்றி கழகம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய இளைஞரணி அலுவலகம் திறப்பு விழா இளைஞர் அணி இணை அமைப்பாளர் என். விக்னேஷ் சிவன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் முனிசாமி கலந்துகொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.
உடன் ஒன்றிய செயலாளர் எம். முனிசாமி ஒன்றிய இணை செயலாளர் சஞ்சீவ் காந்தி இளைஞரணி அமைப்பாளர் ரவிநாத் அம்மணாங்கோயில் ஊராட்சி செயலாளர் ரமணன் தவெக ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அனிஷ் கரண், தில்லைவாணன் ஒன்றிய பொருளாளர், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பல்வேறு அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More Stories
19-09-2026
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள்
கீழக்கரை கடற்கரையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி