July 15, 2026

கீழக்கரையில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரி சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அயோடின் கலந்த உப்பின் அவசியம், அதன் உடல்நல நன்மைகள், உணவு பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாக அலுவலர் இப்ராஹிம், பள்ளித் தலைமை ஆசிரியை அருட்செல்வி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில், மாணவர்களிடம் உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையினருக்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

Spread the love