July 15, 2026

பெரியகோட்டை கிராமத்தில்அனுமதியில்லாமல் விவசாய நிலத்தில் தார்சாலை அமைக்க கூடாதுமாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தியிடம் விவசாயிகள் கோரிக்கை…..

ஒட்டன்சத்திரம் ஜூலை-14

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பெரியகோட்டை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அனுமதியில்லாமல் தார்சாலை அமைப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அவர்களிடம் விவசாயிகள் சார்பாக காசியகவுண்டன்புதூர் கே.பி.கருப்புச்சாமி ஆட்சேபனை தெரிவித்து கோரிக்கை மனுவினை அளித்தார்.

அம்மனுவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பெரியகோட்டை கிராமம், காசியகவுண்டன்புதூரில் எனக்கும் எனது வகையறாக்களுக்கும் 7 பல்வேறு சர்வே எண்கள் உள்ள விவசாய நிலங்கள் உள்ளன. அதில் எங்கள் தேவைக்கு 8 அடி அகலத்தில் பொதுப்பாதையாக அமைத்து அனுபவித்து வருகிறோம். அதில் பைப் மற்றும் ஒரு ஓரத்தில் நீர் செல்வதற்காக ஓடை அமைத்து பயன்படுத்தி வருகிறோம். இப்பொழுது தார்சாலை அமைக்க போவதாக இருபுறமும் 4 அடி அகலப்படுத்தி விவசாய நிலத்தை எங்களது அனுமதி இல்லாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர் போலீஸில் அரசு வேலையை தடுப்பதாக எங்கள் மீது புகார் தெரிவித்துள்ளார். நாங்கள் சாலை அமைக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதனை முறைப்படுத்தி விவசாய நிலத்திற்கு சேதாரம் இல்லாமல்  8 அடி பாதை அளவிற்கு சாலை அமைக்க எங்களுக்கு எவ்வித ஆட்சேபைணயும் இல்லை எங்களுக்குப் பாத்தியப்பட்ட தனிப்பட்ட பட்டா நிலத்தில் அரசு சார்பில் சாலை அமைக்க எங்களது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக்கொள்கிறோம். 

எனவே சொந்த பட்டா நிலத்தில் விவசாய நிலங்களுக்கு சேதாரம் ஏற்படாமல் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Spread the love