ஒட்டன்சத்திரம் ஜூலை-14
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் இந்திய மருத்துவ கழகம் சார்பாக பொதுமக்களுக்கான விழிப்புணர்வு இரட்டையர் இறகுபந்து போட்டி ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இந்திய மருத்துவ கழகம் ஒட்டன்சத்திரம் செயலாளர் மற்றும் அரசு மருத்துவமனை முன்னாள் தலைமை மருத்துவர் டாக்டர்.ஏ.ஆசைத்தம்பி முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்ற ஓடைப்பட்டி கூட்டுறவு வங்கி முன்னாள் செயலாளர் கணேஷ்குமார், ஆசிரியர் சௌந்தரராஜன், இந்திய ஆயுள்காப்பீட்டு கழக பழனி பகுதி மூத்த ஆலோசகர் கனகராஜ், ஆசிரியர் பொன்ராஜ், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் ஓய்வு டேனியல் ஆகியோர்களுக்கு இந்திய மருத்துவ கழகம் ஒட்டன்சத்திரம் துணைத்தலைவர் டாக்டர்.ஏ.முத்துச்சாமி பரிசுகள் வழங்கி பாராட்டினார். விளையாட்டு போட்டிகளை சன்சட்டில் கிளப் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் மற்றும் குழுவினர் நடத்தினர்.

More Stories
31-08-2026
த.வெ.க.சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
காங்கிரஸ் கட்சியின் அடிப்படையில் இருப்பவர்களுக்கும் பாரபச்சம் இல்லாமல் பதவிகள் வழங்கப்படும் திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் R. P.ரமேஷ் பேட்டி.