ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த பன்றிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பன்றிகளை அப்புறப்படுத்த ஏற்கனவே இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காததால், நகராட்சி நிர்வாகம் சார்பில் பன்றிகள் அப்புறப்படுத்தப்பட்டன. பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More Stories
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்
பழனி முருகன் மலைக்கோவிலில் ரோப் கார் சேவை