கேரளாவில் 56 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பினராயி விஜயன் தர்மடம், கே.கே. ஷைலஜா பேராவூர்.
கேரளாவில் எம்எல்ஏக்களாக உள்ள 56 பேருக்கு தேர்தலில் போட்டியிட ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் 86 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகப் போட்டியிடுகிறது. கேரளாவில் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் தற்போது உறுப்பினர்களாக உள்ள 56 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் கண்ணூர் மாவட்டத்தின் தர்மடம் தொகுதியில் களமிறங்குகிறார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, மட்டன்னூருக்குப் பதில், பேராவூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

More Stories
“தவெக பிரச்சினைகளுக்கு முதல்வர் விஜய் வாய் திறந்து விளக்கம் அளிக்க வேண்டும்” – மு.வீரபாண்டியன்
மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக திருச்சி காவிரி ஆற்றில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
“தவெக ஆட்சியில் தமிழகம் வரம்பு மீறிய குற்றங்கள் நடக்கும் இடமாக மாறிவிட்டது” – மு.க.ஸ்டாலின்