July 30, 2026

சிஜேபியை தொடர்ந்து இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம் இணையத்தில் வைரல்

புதுடெல்லி: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை தொடர்ந்து இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்​கம் இணை​யத்​தில் வைரலாகி​யுள்ளது.

நாட்​டின் இளைஞர்​கள் குறித்து தலைமை நீதிபதி சூர்ய காந்​தின் விமர்​சனத்தை தொடர்ந்​து, கரப்​பான்​பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) என்ற நையாண்டி சமூக ஊடக அமைப்பு இணை​யத்​தில் தொடங்கப்​பட்​டது. அபிஜித் திப்கே என்​பவ​ரால் தொடங்​கப்​பட்ட இந்த அமைப்பு தேர்வு முறை​கேடு​களுக்கு எதி​ரான மிகப்​பெரிய இயக்​க​மான உரு​வெடுத்​தது. இது நாடு தழு​விய போராட்​டங்​களை ஏற்​படுத்தி இறு​தி​யில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிரதானின் ராஜி​னா​மா​வில் முடிவடைந்​தது.

இந்​நிலை​யில், இடஒதுக்​கீட்​டுக்கு எதி​ராக ‘ரிசர்வேஷன் ஹட்டாவோ அந்தோலன்’ என்ற இன்​ஸ்​டாகி​ராம் பக்​கம் 55 லட்சத்துக்​கும் அதி​க​மான பின்​தொடர்​வோரை கடந்​துள்​ளது. இதில் 100-க்​கும் மேற்​பட்ட பதிவு​கள் உள்​ளன. இது இந்​திய ராணுவத்​தின் அதி​காரப்​பூர்வ பக்​கத்தை மட்​டுமே பின்​தொடர்கிறது. மேலும், தங்​களை “மக்​களால் ஆதரிக்​கப்​படும் ஓர் இயக்கம்” என்று அழைத்​துக் கொள்​கிறது.

அதன் சுய​விவரப் பக்​கத்​தில் பி.ஆர்​.அம்​பேத்​கரின் ‘கற்​பி, ஒன்று சேர் புரட்சி செய்’ என்ற முழக்​கத்​துடன் “அனைத்து சாதி​களும் சமமானவை; இந்த நாடு சிறந்​த​தாக இருக்க வேண்​டும் என்​பதே எனது ஒரே ஆசை” என்ற இந்​திச் செய்​தி​யும் இடம் பெற்​றுள்​ளது. இன்​ஸ்​டாகி​ராம் பதிவு ஒன்​றில், தங்​களுக்கு எந்​தவொரு அரசி​யல் கட்​சி​யுட​னும் தொடர்​பில்லை என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இருப்​பினும், இந்த அமைப்​பின் நிறு​வனர் யார் என்று இன்​னும் தெரிய​வர​வில்​லை.

E20 ஜனதா கட்சி

இதே​போன்ற மற்​றொரு நையாண்டி சமூக ஊடகப் பக்​க​மான ‘E20 ஜனதா கட்​சி’ என்​பதும் இணை​யத்​தில் கவனம் ஈர்க்​கத் தொடங்கியுள்​ளது, இதன் நிறு​வனரின் அடை​யாள​மும் வெளிவரவில்​லை. 20% எத்​த​னால் மற்​றும் 80% பெட்​ரோல் கலவையான ‘E20 எரிபொருளை’ ஊக்​குவிக்​கும் மத்​திய அரசின் திட்​டத்தை இது இலக்கு வைப்​ப​தாகத் தெரி​கிறது.

Spread the love