February 11, 2026

டிரம்ப் – நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்

ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் புதிய உச்சங்களை எட்டுவதை சர்வதேச நாடுகள் தடுக்காவிட்டால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதை தடுக்க முடியாது.

Donald Trump and Benjamin Netanyahu

பெஞ்சமின் நெதன்யாகுவுடன் டொனால்ட் டிரம்ப்படம் – ஏபி

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுப்பார்கள் என ஈரான் ராணுவ அதிகாரியும் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் முன்னாள் தலைவருமான முகமது பாக்பூர் தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே நிலவிவரும் பதற்றம் புதிய உச்சங்களை எட்டுவதை சர்வதேச நாடுகள் தடுக்காவிட்டால் மூன்றாம் உலகப் போர் ஏற்படுவதை தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையில் தரைப்படைகளின் தலைவராக இருந்த முகமது பாக்பூர், தற்போது ஈரான் ராணுவத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழல் குறித்து முகமது பார்பூர் பேசியதாவது:

சர்வதேச அளவில் நீடித்துவரும் பதற்றமான சூழலை உலக நாடுகள் தடுக்காவிட்டால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுப்பார்கள்.

பதற்றத்தை அதிகரித்து உலகை இதுவரை இல்லாத பேரழிவை நோக்கித் தள்ளுவதால், டிரம்ப்பையும் நெதன்யாகுவையும் ஹிட்லர், செங்கிஸ்கான் உடன் மொஹ்சென் ரெசாயி ஒப்பிட்டுள்ளார். இது கவனிக்கப்பட வேண்டியது எனக் குறிப்பிடுள்ளார்.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த ராணுவ அதிகாரியும் இஸ்லாமிய ஈரானின் எதிர்ப்பு முன்னணியைச் சேர்ந்தவருமான மொஹ்சென் ரெசாயி, டிரம்ப்பின் செயல்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதேபோன்று ஈரானின் மற்றொரு ராணுவ அதிகாரி முகமது ஜாவத் லரிஜானி கூறுகையில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் வேர்கள் அனைத்தும் தரைமட்டமாக்கப்படும் என்றும், பெரிய அளவிலான அமெரிக்கர்களின் பலிக்கு இது காரணமாகிவிடும் எனவும் எச்சரித்தார்.

ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுப்படுத்துமாறு அதிபர் டிரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று (பிப். 11) அமெரிக்காவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மேற்கொண்டுவரும் பல நடவடிக்கைகள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது. இந்நிலையில், டிரம்ப்பும் நெதன்யாகுவும் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுப்பார்கள் என ஈரான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love