நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் சாதனைகள் பற்றி…

ஃபின் ஆலன்– PTI
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் உள்பட ஒரே நாளில் பல சாதனைகளை நியூசிலாந்தின் ஃபின் ஆலன் புதன்கிழமை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் புதன்கிழமை இரவு விளையாடிய நியூசிலாந்து அணி, வெறும் 12.5 ஓவர்களில் 170 ரன்கள் என்ற இலக்கை விரட்டி அதிரடி வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் விளாசி, தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களை திணறடித்தார்.
இந்த ஆட்டத்தில் ஃபின் ஆலன் 33 பந்துகளில் சதம் விளாசியதே, டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாகும். இதற்கு முன் 2016-இல் கிறிஸ் கெயில் இங்கிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது.
மேலும், டி20 உலகக் கோப்பை நாக்-அவுட் போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ஃபின் ஆலன் பெற்றுள்ளார்.Advertise with us
இதுமட்டுமின்றி, 10 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் அடித்த ஃபின் ஆலன், உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள ஆலன், 289 ரன்கள் அடித்துள்ளார். அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

More Stories
சிராஜின் மறக்க முடியாத ‘பவுல்டு’ – ஓவலில் இங்கிலாந்தின் இதயம் நொறுங்கிய இந்திய வெற்றி!
CWG 2026: மூட்டுவலியை வென்று பதக்கம் வென்ற சீமா
பாரா தடகளத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் திலீப் மஹது காவிட்