November 5, 2026

தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 பயிற்சிப் பணியிடங்கள்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TNPDCL) பொறியியல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு 500 தொழில்நுட்பப் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஓராண்டு பயிற்சி வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் நவம்பர் 28-க்குள்ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விவரங்களுக்கு: https://nats.education.gov.in/

புதுக்கோட்டை அரசு ஐ.டி.ஐ.யில் வேலைவாய்ப்பு!

புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அக்டோபர் 26 முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் நவம்பர் 17-க்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: https://pudukkottai.nic.in/ஈரோடு மாவட்ட சுகாதாரத் துறையில் 78 பணியிடங்கள்!
ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் சுகாதார ஆய்வாளர், மருத்துவ அலுவலர், ஆய்வக நுட்புநர், தரவு பதிவாளர், ஓட்டுநர், மருந்தாளுநர் உள்ளிட்ட

78 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் நவம்பர் 12-க்குள் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: https://erode.nic.in/

பாரதியார் பல்கலைக்கழகத்தில் 5 பணியிடங்கள்!

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இயக்குநர், கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், டீன், என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர், மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட 5 நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் நவம்பர் 30-க்குள் நேரடி முறையில் விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 6 பணியிடங்கள்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் உதவி போக்குவரத்து மேலாளர், கணக்கு அதிகாரி, உதவிப் பொறியாளர் (மின்சாரம்), இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 6 நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் நவம்பர் 14 இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: www.vocport.gov.in

மத்திய உணவு ஆராய்ச்சி நிறுவனத்தில் 28 பணியிடங்கள்!

மைசூருவில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (CFTRI) 28 டெக்னீசியன் பணியிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. அக்டோபர் 19 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் நவம்பர் 18-க்குள் விண்ணப்பிக்கலாம்.

விவரங்களுக்கு: https://cftri.res.in/

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 3,047 காலியிடங்கள்!

மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் (ONGC) 3,047 தொழிற்பழகுநர் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் ஓராண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அக்டோபர் 29 முதல் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 20.

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 3,047 பணியிடங்கள்!

மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 3,047 தொழிற்பழகுநர் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் ஓராண்டு பயிற்சி வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 20.11.2026.

Spread the love