August 5, 2026

திண்டுக்கல்

மாவட்ட அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் இருக்கைக்கு அருகே அமர்ந்த TVK மாவட்ட செயலாளர் மற்றும் TVK நிர்வாகிகள் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திண்டுக்கல் பொறுப்பு அமைச்சரான விக்னேஷ் தலைமையில் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு கூட்டம் பகல் 3:30 மணிக்கு துவங்கியது இந்த கூட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஜோதிமணி நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அய்யனார் மற்றும் மாவட்டத்தில் உள்ள  அனைத்து துறை அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

ஆய்வுக் கூட்டத்தின் மேடையில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட தலைமை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டன 

ஆய்வு கூட்டம் துவங்கிய போது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் தர்மராஜ் ஆய்வுக் கூட்டத்தின் அமைச்சர் இருக்கைக்கு அருகே அதிகாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார் மேலும் அவருடன் வந்த டிவி கே மாவட்ட நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளரின் இருக்கைக்கு பின் நின்றனர்

அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ளும் ஆய்வுக் கூட்டத்தில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாத அரசியல் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் அதன் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில்  கலந்து கொண்டு மேடையிலும் அமர்ந்தது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அரசு அதிகாரிகள் ஆய்வுக் கூட்டமா அல்லது டிவிக்கு கட்சியினரின் மாவட்ட கூட்டமா

தற்போது எந்த ஒரு அரசு பொறுப்பும் இல்லாத TVK அரசியல் கட்சியினர் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டது திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெறும் அனைத்து அரசு கூட்டத்திலும் இதுபோல் நடக்குமா என்ற அச்சத்தையும் அதிகாரிகளிடம் ஏற்படுத்தி உள்ளது

தமிழக அரசும் தமிழக முதல்வரும்  உடனடியாக நடவடிக்கை எடுத்து அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வில் கட்சியினர் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்ற அறிக்கை வெளியிட வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது

Spread the love