August 5, 2026

பழனியில் தமிழக வெற்றி கழகத்தினர் ஆர்ப்பாட்டம் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து,,

 பழனி ஆகஸ்ட் 5 

பழனியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேற்கு மாவட்ட தலைவர் கார்த்திக் ராஜா தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் மிதுன் மனோகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட இணை செயலாளர் சிவா, மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், நிர்வாகிகள் ஜே பி எஸ் சஞ்சய் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகம் மகளிர் அணியினர் உள்பட கட்சியினர், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷம் போட்டனர். பின்பு பழனி டவுன் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முனியசாமியிடம் புகார் மனு அளித்தனர்

Spread the love