October 16, 2026

திருப்பூர் திரையரங்குகளில் ஜெயிலர்-2 கொண்டாட்டம். 

திருப்பூர்-16

திருப்பூரில் ஜெயிலர்-2 திரைப்பட வெளியீட்டை ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாகக் கொண்டாடினர். சக்தி, கணேஷ் உள்ளிட்ட திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. நான்கு திரையரங்குகளில் படம் பார்க்க வந்த ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ரசிகர் மன்றத்தினர் தலா ஐந்து கிலோ அரிசியை இலவசமாக வழங்கினர். கணேஷ் திரையரங்கில் பெண்களுக்கான சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டன. விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே நோக்கம் என ரசிகர்கள் தெரிவித்தனர்.

Spread the love