August 14, 2026

திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அறிமுகம்!

திருப்பூர், ஆக.14

திருப்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள ரேவதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் தற்போது புதியதாக அறிமுகபடுத்தப்படட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள மத்தியமாநில அரசாங்கத்தினால் அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றுள்ளது. தொடர்ந்து இம் மருத்துவமனையில் வெற்றிகரமான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் மிகவும் நுணுக்கமான மற்றும் சவாலான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, நோயாளியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றிகரமான சிகிச்சை குறித்தும், அதன் மருத்துவ நுணுக்கங்கள் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்தும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் ஆகியவர்களோடு ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர்.  ஈஸ்வரமூர்த்தி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.

Spread the love