
திருமலை: திருமலையில் கோடைக்கால தரிசன ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி கூறியதாவது:
கோடைக்கால தரிசன ஏற்பாடுகளை சிறப் பாக செய்திட வேண்டும். இதில் சாமானிய பக்தர் களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். கடந்த கோடையில் தினமும் 82,000 பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்தனர்.
கடந்த ஜனவரியில் தினமும் சராசரியாக 74 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தரிசன ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

More Stories
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் சித்திரை பெருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கோலாகல தொடக்கம்
பழநி பெருமாள் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்