ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறு வரை மசோதாவை கண்டித்து ஈரோட்டில் மாநில மாணவரணி சார்பில் பெரியார் நகர் 80 அடி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணிச் செயலாளர் ஈரோடு ஜெ. வீரமணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இக்கட்டத்தை திரும்ப பெறக்கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ. செந்தில்குமார், க சின்னையன், செல்லப்பொன்னி, ப க பழனிச்சாமி, டி எஸ். குமாரசாமி, மாநகரக் கழக செயலாளர் மு. சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் அக்னி டி சந்திரசேகரன், வி சி நடராஜன், வில்லரசம்பட்டி ஏ. முருகேசன், குறிஞ்சி என். தண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனசேகர், துணை அமைப்பாளர் சி என் கார்த்திகேயன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திலகவதி, ஸ்ரீதர், மாணவரணி துணை அமைப்பாளர்கள் சதீஷ்குமார் நல்லசிவம் விஜயகுமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொகுதி மறு வரையறை, திமுக மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்!
Oplus_16908288

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்