February 7, 2026

தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! பிரதமர் மோடி பாராட்டு!

பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து 9-ஆவது முறையாக தாக்கல் செய்யும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். 2026 – 27 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வரும் ஞாயிற்றுக்கிழமை(பிப். 1) நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாவது : “நிர்மலா சீதாராமன், இந்த நாட்டில் ஒரு பெண் நிதியமைச்சரொருவராக, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து 9-ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இத்தருணம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலொரு பெருமைக்குரிய விஷயமாகப் பதிவாகி நிலைத்திருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Spread the love