ரோம்: இத்தாலியின் ரோம் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்றது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் இலங்கையின் ருமேஷ் பதிரகே 92.62 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து சாம்பியன் பட்டம் வென்றார். அவரது செயல் திறன் ஆசிய தடகள வரலாற்றில் 2-வது மிக நீண்ட தூரமாகப் பதிவாகியுள்ளது.
இதன் மூலம், இந்திய நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவின் (90.23 மீ) சாதனையை ருமேஷ் பதிரகே முறியடித்துள்ளார். 90 மீட்டர் என்ற வரலாற்று இலக்கை எட்டிய நான்காவது ஆசிய வீரர் மற்றும் ஒட்டுமொத்த தடகள வரலாற்றில் 28-வது வீரர் என்ற பெருமையை ருமேஷ் பதிரகே பெற்றுள்ளார்.

More Stories
இந்தியா யு–19 அணி 411 ரன்கள் குவிப்பு
ஆகஸ்ட் 4 முதல் பள்ளிகளுக்கான வாலிபால் போட்டி
தாயகம் திரும்பிய ஸ்பெயின் சாம்பியன்கள்: உற்சாக வரவேற்பளித்த 20 லட்சம் மக்கள்