ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரத்தில், ஆத்மா திட்டத்தின் கீழ் “கிசான் கோத்தீஸ்” வயல் தின விழாநடைபெற்றது. இதில் நெல் சாகுபடிக்கு மாற்றாக பயறு சாகுபடி, இயற்கை வேளாண்மை, மண்–நீர் பரிசோதனை, உயிர் உரங்களின் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தென்னை சாகுபடி, விதை நேர்த்தி, மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் செய்முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டன. அரசு மானியத் திட்டங்களை பயன்படுத்தி அறிவியல் முறையில் சாகுபடி செய்து மகசூலையும் வருமானத்தையும் உயர்த்துமாறு விவசாயிகளுக்கு, வேளாண்மைத் துறையினர் அறிவுறுத்தினர்.
பயறு சாகுபடி, இயற்கை வேளாண்மைக்கு விழிப்புணர்வு

More Stories
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 629 மனுக்கள் பெறப்பட்டன
கழிவு நீர் குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் கமலக்கண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
திருப்பூர்