புதுடெல்லி: சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு எந்த கட்டுமானங்களுக்கும் ஒப்புதல் வழங்கக் கூடாது என உத்தரவிட்டது
இந்த உத்தரவால் பள்ளிக்கரணை பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி கட்டுமானப் பணிகள் முழுமையாக தடைப்பட்டுள்ளதாகக் கூறி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சதுப்பு நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அணுகும்படி ‘கிரெடாய்’ உள்ளிட்ட மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
அதேவேளையில், சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறை செய்யும் பணிகளை விரைந்து முடிக்க தமிழ்நாடு மாநில சதுப்பு நில ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், தனது தரப்பு வாதத்தையும் கேட்ட பின்னரே வழக்கில் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

More Stories
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம்: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
புழல், சூரப்பட்டில் ரூ.701 கோடியில் நடந்துவரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஆய்வு
காசி தமிழ் சங்கமம் 5.0: சிறப்பு ரயிலைத் தொடங்கி வைத்தார் ஆளுநர்