பள்ளிக்கு மாணவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது .வரும் ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மே 4-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசு ஆலோசனை
இது குறித்து முதல்வர் விஜய்யுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராஜ் மோகன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் நிலமும் வானிலை சூழல் மற்றும் ஜூன் மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்புகளை அரசு கவனத்தில் கொண்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் சுகாதாரம் குடிநீர் வசதி போக்குவரத்து ஏற்பாடு பள்ளிகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இருச்சக்கர வாகனம் பயன்படுத்தும் மாணவர்கள்
அதே போல் தமிழக பள்ளிக் கல்வித் துறை, மாணவர்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவது குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ். கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க பள்ளிகளில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய உத்தரவு வெளியீடு

அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றம் அமைக்க வேண்டும். இந்த மன்றத்தை உடற்கல்வி ஆசிரியர்கள் வழிநடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், தினமும் காலை வழிபாட்டு கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு கருத்துகளை மாணவர்களுடன் பகிர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்சிசி, என்எஸ்எஸ், சாரணர் இயக்கம் மற்றும் இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு போக்குவரத்து காவல்துறை மூலம் சாலை விதிகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தலைக்கவசம் அணிய கட்டாயம்

அதேபோல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் அவ்வப்போது மாணவர்களை ஈடுபடுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.மாணவர்கள் தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை

மேலும், மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால், அந்த வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கிய பிறகே ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வெளியிலும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லாமல் இருக்க தேவையான அறிவுரைகளை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

More Stories
சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா:
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மாயாண்டி கோவில் வைகாசி மாத உற்சவ விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊர்வலம்
கோவில்பட்டி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்தபோது விபத்து – 2 பேர் உயிரிழப்பு