February 11, 2026

பழங்குடியினர் சமூக பெயர் மாற்றம் கோரிய மனு தள்ளுபடி

பழங்குடியினர் சமூக பெயர் மாற்றம் கோரிய மனு தள்ளுபடி

மதுரை: தூத்​துக்​குடியைச் சேர்ந்த செல்​வகு​மார் என்​பவர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 2019-ல் பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணை​யில் சீர்​மரபினருக்​கான சாதிச் சான்​றிதழ் டிஎன்டி என்ற ஒரே பெயரில் வழங்​கப்பட வேண்​டும் எனக் கூறப்​பட்​டது.

ஆனால், நடை​முறை​யில் டிஎன்​டி/டிஎன்சி என இரு​வகைச் சான்​றிதழ்​கள் வழங்​கப்​படு​கின்​றன. இதனால் பழங்குடியினர் பிரி​வில் வருபவர்​கள் மத்​திய அரசின் நலத் திட்​டங்​களைப் பெற முடி​யாத நிலை உள்​ளது.

குற்​றப் பரம்​பரைச் சட்​டம் ரத்து செய்​யப்​பட்ட பின்​னரும், அவர்​களை அறி​விப்பு நீக்​கப்​பட்ட பழங்​குடிகள் (டி நோட்​டி பைடு டிரைப்​ஸ்) என்று அழைப்​பது சட்​ட​விரோத​மாகும்.

அவர்​களை மரி​யாதைமிக்க பூர்வீக பழங்​குடிகள் (டிக்​னிலைடு நேட்​டிவ் டிரைப்​ஸ்) என்று அழைக்க வேண்​டும். எனவே சாதிச் சான்​றிதழ் வழங்​கும்​போது, அறி​விப்பு நீக்​கப்​பட்ட பழங்​குடிகள் என்​ப​தை, மரி​யாதைமிக்க பூர்வீக பழங்​குடிகள் என்று வழங்​க​வும், அவர்​களுக்கு தேசிய அளவில் தனி இட ஒதுக்​கீடு வழங்​க​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

அரசிடம் முறையிடலாம்… இந்த மனுவை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​து, “இது அரசின் கொள்கை முடிவோடு தொடர்​புடையது என்​ப​தால், நீதி​மன்​றம் எந்த உத்​தர​வை​யும் பிறப்​பிக்க இயலாது. மனு​தா​ரர் அரசிடம் முறை​யிட்டு நிவாரணம் பெறலாம். மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டது.

Spread the love