பழனி ஜூன் 13
பழனி அருகே உள்ளது ஆயக்குடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் வயது 47 விவசாயி. இவரிடம் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் தன்னிடம் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள இரிடியம் விற்பனைக்கு உள்ளதாகவும் கூறி ரூபாய் 19 லட்சத்தை வாங்கிக்கொண்டு டிராவல் பேக் ஒன்றை வழங்கினார். அதில் இரிடியம் இருப்பதாகவும் அதை வீட்டில் சென்று சாமி படத்தின் முன்புதான் திறந்து பார்க்க வேண்டும் என்று கூறினார். அதன்படி பரமேஸ்வரன் வீட்டில் சென்று இரிடியம் உள்ளதாக கூறப்பட்ட பேக்கை திறந்து பார்த்தபோது. அதில் வெறும் காலியாக காகித பெட்டி தான் இருந்தது. அதில் இரிடியம் இல்லை. இதனால் பரமேஸ்வரன் ஏமாற்றம் அடைந்தார். இது பற்றி பழனி ஆயக்குடி போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு