February 28, 2026

பழனியில் உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம் 

 பழனி மார்ச் 28

 பழனியில்,அடிவாரம் அருள்ஜோதி வீதியில் உள்ள  சங்கராலயத்தில் உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம் முதல் நாள் பூஜை உடன் தொடங்கியது. இதற்கு மகா ருத்ர யாக கமிட்டி செயலாளர் முருகனடிமை எம் பாலசுப்பிரமணிய சாமிகள் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வேத விற்பனர்கள் பங்கேற்று வேத மந்திரங்களை முழங்கினர். நான்கு நாட்கள் தொடர்ந்து மகா ருத்ர யாகம் நடைபெறுகிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை  சங்கராலயம்  முருகனடிமை எம் பாலசுப்பிரமணிய சுவாமிகள், பி.சிவகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்

Spread the love