பழனி அக்டோபர் 3
பழனியில், மகாத்மா காந்தியின் 157 வது பிறந்த தின விழாவை முன்னிட்டும், பெருந்தலைவர் காமராஜரின் 51 வது நினைவு தினத்தை முன்னிட்டும், வ உ சி பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கும், சரவணப் பொய்கை அருகே உள்ள காமராஜர் சிலைக்கும், பழனி நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிகளில் மாநில செயலாளர் வழக்கறிஞர் மணிக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகசபாபதி, பி டி சி நாகராஜன், நாகேஸ்வரன், பாலசுப்பிரமணியம், மாவட்ட இளைஞரணி தலைவர் சுந்தரபாண்டியன், வட்டார தலைவர் ராஜேந்திரன், நகர துணை தலைவர் திருஞானசம்பந்தம், நகர பொருளாளர் பாஸ்கரன், பாலசமுத்திரம் பேரூர் தலைவர் ராமு, கீரனூர் பேரூர் தலைவர் காட்டப்பன், மாவட்ட செயலாளர் வீரபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

More Stories
கரூர்
03-10-2026
கரூர் மாவட்டம்