பழனி ஜூன் 15
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில், 2024 ஜூலை 1 ந் தேதி பழனி அடிவாரம் கிரி விதி அண்ணா செட்டி மடம் பகுதியில் இருந்த ரூபாய் 100 கோடி மதிப்பிலான 120 ஆக்கிரமிப்புகள் கோவில் நிர்வாகத்தால் அகற்றப்பட்டது. தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால உத்தரவு மற்றும் திண்டுக்கல் கலெக்டர் உத்தரவுபடி நேற்று வருவாய்த்துறையினர் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து துணை ஆணையர் வெங்கடேசன் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அண்ணா செட்டி மடம் பகுதியில் ரூ 10 கோடி மதிப்பிலான 14 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் ரூபாய் 1327 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டது என்று கோவில் நிர்வாகத்தினர் கூறி உள்ளனர்

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்