November 26, 2026

பிறந்த தேதிப்படி தொழில் வாய்ப்புகள்: 

எண் கணிதத்தின்படி, பிறந்த தேதியின் எண்ணைப் பொறுத்து ஒருவரின் திறமைகளும் பொருத்தமான தொழில் துறைகளும் அமையும் எனக் கூறப்படுகிறது.

எண் 1: தலைமைப் பண்பு, தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள். தொழில்முனைவு, வணிகம் மற்றும் உயர்மட்ட மேலாண்மைத் துறைகளில் சிறந்து விளங்கலாம்.

எண் 2 — பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29: பிறருடன் இணைந்து செயல்படுவதிலும் சூழலுக்கு ஏற்ப அனுசரிப்பதிலும் திறன் கொண்டவர்கள். கலை, நடிப்பு, ஆடை வடிவமைப்பு, ஊடகம், மக்கள் தொடர்பு மற்றும் தூதரகப் பணிகள் இவர்களுக்கு ஏற்றதாகக் கூறப்படுகிறது.

எண் 3 — பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30: திட்டமிடல் மற்றும் நிர்வாகத் திறன் கொண்டவர்கள். பொறியியல், கணக்கீடு, ஆராய்ச்சி, வங்கி நிர்வாகம், கல்வி மற்றும் சில்லறை வணிகத்தில் சிறக்கலாம்.

எண் 4 — பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31: வித்தியாசமாகச் சிந்தித்து புதுமையான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். தொழில்நுட்பம், ஆராய்ச்சி, வடிவமைப்பு, சிக்கல் தீர்வு மற்றும் உளவுத்துறைப் பணிகள் ஏற்றதாக இருக்கலாம். இவர்களின் அணுகுமுறை சில நேரங்களில் கெட்ட பெயரையும் ஏற்படுத்தலாம்.

எண் 5 — பிறந்த தேதிகள்: 5, 14, 23: சுறுசுறுப்பு, இனிய பேச்சு, தகவல் தொடர்புத் திறன் மற்றும் புதிய சூழலுக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டவர்கள். சந்தைப்படுத்தல், ஊடகம், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் வாய்ப்புகள் அதிகம்.

எண் 6 — பிறந்த தேதிகள்: 6, 15, 24: கவர்ச்சியான பேச்சு, ஆளுமை மற்றும் அழகுணர்வு கொண்டவர்கள். ஃபேஷன், அழகுசாதனத் துறை, உள் அலங்காரம், ஹோட்டல், உணவு தயாரிப்பு மற்றும் விருந்தோம்பல் துறைகள் பொருத்தமாக இருக்கலாம்.

எண் 7 — பிறந்த தேதிகள்: 7, 16, 25: ஆழ்ந்த சிந்தனையும் ஆராய்ச்சி ஆர்வமும் கொண்டவர்கள். ஆராய்ச்சி, தொழில்நுட்பம், கல்வி, தரவுப் பகுப்பாய்வு மற்றும் எழுத்துத் துறைகளில் சிறக்கலாம்; ஆன்மிகத்திலும் நாட்டம் இருக்கும்.

எண் 8 — பிறந்த தேதிகள்: 8, 17, 26: கடின உழைப்பும் பொறுப்புணர்வும் கொண்டவர்கள். வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்; இருப்பினும் உயர்ந்த நிலையை அடையக்கூடும். அரசியல், நிர்வாகம், நீதித்துறை, ரியல் எஸ்டேட் மற்றும் மேலாண்மைத் துறைகளைப் பரிசீலிக்கலாம்.

எண் 9 — பிறந்த தேதிகள்: 9, 18, 27: தைரியமும் ஆற்றலும் கொண்டவர்கள்; வேலையை விரைவாக முடிக்க விரும்புவார்கள். பாதுகாப்பு, விளையாட்டு, பொறியியல், ரியல் எஸ்டேட் மற்றும் செயல்பாட்டு மேலாண்மைத் துறைகளில் சிறக்கலாம். தங்களின் வேகத்தையும் ஆற்றலையும் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும்.

Spread the love