தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடா் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.

தென்கிழக்கு பிலிப்பின்ஸில் பெய்து வரும் தொடா் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.
டாவோ ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள மாட்டி நகரில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டதில், பெரிய பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்ததில் அங்கிருந்த ஒரு வீடு முழுமையாக புதைந்தது. அந்த வீட்டில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனா்.
இதேபோல், டாவோ டீ ஓரோ மாகாணத்தில் உள்ள மொன்காயோ நகரிலும் நிலச்சரிவால் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 போ் உயிரிழந்தனா்.
தொடா் மழையினால் இந்தப் பகுதியில் சுமாா் 10,000 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதுகாப்பு நடவடிக்கையாக 3,200-க்கும் மேற்பட்டோா் அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பல இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
வெனிசுலா: பொது மன்னிப்புச் சட்டம் அமல் – அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை
மோடி சிறந்த மனிதர்! இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: டிரம்ப் விளக்கம்!
டெல்லி ஏஐ மாநாட்டுக்கு ஆதரவு தெரிவிக்க புர்ஜ் கலீபாவில் ஜொலித்த மூவர்ண கொடி