சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை, திருவொற்றியூர், தாங்கல் பீர் பயில்வான் பகுதியில் மாநகராட்சியின் உரிய உரிமம் பெற்று அலி என்பவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
கடந்த 16-ம் தேதி சிவாஜி என்பவர் மற்றும் அவருடன் சில நபர்கள் அலியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாடுகளை வெட்டக் கூடாது என அச்சுறுத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த அத்துமீறல் சம்பவத்தின்போது, காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சில காவலர்களும் உடன் சென்றுள்ளனர்.
காவல்துறையினரின் முன்னிலையிலேயே இந்த அச்சுறுத்தல்களும், மதவெறி நடவடிக்கைகளும் நடந்துள்ளன. இது சென்னையில் திட்டமிட்ட முறையில் மதவெறி கலவரங்களைத் தூண்டுவதற்கான ஒரு முயற்சியாகும்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் தெற்கு பகுதி குழுவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
எனினும், காவல்துறையினர் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப உரிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை.
சென்னையில் மதக்கல வரத்தை தூண்ட முயற்சிக்கும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More Stories
தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ கோரிக்கை
‘போதையில்லா கரூர்’ விழிப்புணர்வு மாரத்தான்: திருச்சி மத்திய மண்டல ஐஜி தொடங்கி வைத்து பங்கேற்பு
பெரம்பூர் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு