சென்னை: கிருஷ்ணகிரியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.9.89 கோடியில் கட்டப்பட்ட 148 புதிய வீடுகளைத் திறந்து வைத்த முதல்வர் விஜய், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட மாதாந்திர பணக்கொடை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டம், பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.8.52 கோடியில் கட்டப்பட்டு, ரூ.1.37 கோடியில் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ள 148 புதிய வீடுகளை, தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
மேலும், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திரப் பணக்கொடையை, குடும்பத் தலைவருக்கு ரூ.1,500-ல் இருந்து ரூ.1,800 ஆகவும், குடும்ப உறுப்பினர்களாக உள்ள 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு ரூ.1,000-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.500-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
மாதாந்திரப் பணக் கொடையை ஆண்டுக்கு ரூ.14.95 கோடி கூடுதல் செலவினத்தில், 19,710 குடும்பங்களைச் சேர்ந்த 56,638 முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் பயன்பெறும் வகையில், 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பயனாளிகளுக்கு முதல்வர் விஜய் நேற்று வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் க.தென்னரசு, தலைமைச் செயலர் மு.சாய்குமார், பொதுத் துறை செயலர் எ.சுந்தரவல்லி, அயலகத் தமிழர் நலத்துறை இயக்குனர் ச.வளர்மதி, பொதுத்துறை இணை செயலர் மா.சவு.சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

More Stories
“அறிவு உலகமா… இல்லை ஊழல் உலகமா?” – பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதல்வர் விஜய் கருத்து
மு.க.ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த சேவை மையம்: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்