திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை களமிறக்க உள்ளதாக தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் திருச்சி கிழக்கு உள்ளிட்ட இரண்டு தொகுதிகளில் முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .அதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு மக்கள் செல்வாக்கை மீண்டும் பெற வேண்டிய கட்டாயத்தை திமுக ஆளாகிய உள்ளது. அதிலும் ,குறிப்பாக அண்மையில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் விஜய் அப்பாவை காணும்.. எங்க இருக்காரு உங்க அப்பா.. என்று பேசியது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு .க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியா?
இது குறித்து மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினர். அப்போது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர் கேள்விக்கு ?இதுவரை முடிவு செய்யவில்லை. ஆலோசித்த பிறகு அறிவிக்கிறேன் என்று கூறி இருந்தார்.இதன் மூலம் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. திமுக உயர்நிலை செயல் திட்ட குழு போட்ட ஆலோசனைக்கு பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
திமுக – மதிமுக உறவில் விரிசல்..
ஒருவேலை திருச்சி கிழக்கு தொகுதியில் மு .க. ஸ்டாலின் போட்டியிட்டால் அவருக்கு எதிராக தமிழக கட்சி கழகத்தில் இருந்து பலமான வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.இதற்கிடையே திமுக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகிக்கும் மதிமுக உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆ. ராசா மதிமுகவை பற்றி பொதுவெளியில் பகிரங்கமாக விமர்சித்து இருந்தார். அப்போது அவர் கூறுகையில் ஒரு அறையில் நிறுத்தி வைத்திருந்தால் எவ்வளவு பேர் இருப்பார்களோ.. அந்த கூட்டம் நம்மை விமர்சிக்கிறது என்று மதிமுகவை மறைமுக விமர்சித்தார். இது மதிமுகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
வைகோவை களமிறக்க விஜய் திட்டமிடுகிறாரா?
இந்த சூழலில் மதிமுக வின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது .அதில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழக கூட்டணியில் சேரும் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தவெக கூட்டணிக்கு மதிமுக வந்தால் மு க ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் வைகோவை களம் இறக்க விஜய் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் vs வைகோ?
ஏற்கனவே திருச்சி லோக்சபா தொகுதியின் தீப்பெட்டி சின்னத்தில் அதிமுக முதன்மை செயலாளர் துறை வைகோ போட்டியிட்டு வெற்றி தற்பொழுது நாடாளுமன்றத்தில் எம்பியாக இருக்கிறார் மேலும் அதே சின்னத்தில் திருத்தி கிழக்கு தொகுதியில் வைகோ போட்டியிட்டால் ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி தர தவெக திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

More Stories
உதவிப் பேராசிரியர் பணி போட்டித் தேர்வில் முறைகேடா? – அரசு விசாரிக்க அன்புமணி கோரிக்கை
மூத்த குடிமக்களுக்கு ஆணையம் அமைக்க வலியுறுத்தல்
என்எல்சி பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: சிபிஎம் , தவாக வலியுறுத்தல்